2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

அத்தநாயக்க வளவு தொழிற்பயிற்சி நிலையமாக மாற்றம்

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1988-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹன விஜேவீர மறைந்திருந்த நாவலப்பிட்டி உலப்பனை பகுதியிலுள்ள அத்தனாயக்க வளவு தொழிற்பயிற்சி நிலையமாகவும் கலைப்பயிற்சி நிறுவகமாகவும் மாற்றப்படவுள்ளது.

இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்நிலையத்தை நாளை திறந்துவைக்கவுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மொடலிங், சமையல், உணவு பதனிடுதல், மின்சாரப் பொறியியல் போன்ற துறைகளில் பயிற்சியளிப்பதற்கான தொழிற்பயிற்சி நிலையமாக இத்தோட்டம் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, கலைப்பயிற்சி நிறுவகத்தில் கண்டி மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு நடனம், பாடல், இசை முதலான துறைகளில் பயிற்சியளிக்கப்படும்.

ரோஹன விஜேவீர கொல்லப்பட்டபின் அத்தநாயக்க வளவு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X