2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

விசாரணையின்றி வழக்கை முடித்துக்கொள்வது குறித்து ஆராய்வு

Super User   / 2011 மார்ச் 25 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி. பாருக் தாஜுதீன்)

தனுன திலகரட்னவின் தாயார் அசோகா திலகரட்ன சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நாணய மோசடி வழக்கை விசாரணையின்றி முடித்துக் கொள்வது பற்றி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பரப்பினர் ஆராய்ந்து வருவதாக இன்று கொழும்பு மேல்நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச தரப்பு வழக்குரைஞர் ரியாஸ் பாரி இதை நீதிமன்றில் தெரிவித்தார்.

அதையடுத்து மார் 28 ஆம் திகதி இவ்விடயம் குறித்து நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு வழக்குத் தொடுநர்களையும் பிரதிவாதிகளையும் நீதிபதி பணித்தார்.

15 மில்லியன் ரூபா உள்நாட்டு நாணயம், 526 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100 ஸ்ரேலிங் பவுண்கள் ஆகியவற்றை  பிரகடனப்படுத்தாமல் வங்கிப் பெட்டகமொன்றில் வைத்திருந்ததாக அசோக திலகரட்னவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .