2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

225ஆவது எம்.பியாகிறார் ரணில்

Ilango Bharathy   / 2021 ஜூன் 17 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 10 மாதங்களாக 224 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இயங்கிய பாராளுமன்றத்துக்கு 225ஆவது உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சிக்குக் கிடைத்துள்ள ஒரேயொரு தேசியப் பட்டியல், அவரூடாக நிரப்பப்படவுள்ளது.அவர், எதிர்வரும் 22ஆம் திகதியன்று, எம்.பியாக சத்தியப்பிரமாணம்செய்துகொள்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், 23ஆம் திகதியன்றே சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


16ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்த்ல், 05.08.2020 அன்று
நடைபெற்றது. அதில், ஐக்கிய தேசியக் கட்சி படு​தோல்வியடைந்தது. எனினும், ஒரேயொரு தேசியப் பட்டியல் மட்டுமே கிடைத்திருந்தது.

அந்தப் பட்டியலுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சிக்குள்
கடுமையான ​பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும், கட்சியின்
தலைவரை அனுப்புவதென, கட்சியின் செயற்குழுவின் ஊடாக இறுதி
செய்யப்பட்டது. அதனடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்க
எம்.பியாக பதவியேற்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .