2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ATM மோசடி; 22 வயது இளைஞன் கைது

Freelancer   / 2023 ஜனவரி 30 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் நகரில் மேற்கொள்ளப்பட்ட ATM கொள்ளை சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொட்டிகாபால பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நேற்று (29) 6 வங்கி அட்டைகளுடன் குருநாகலில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி அவர்களின் பின் இலக்கங்களைப் பெற்று வங்கி அட்டைகளை மாற்றிக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரை இன்று (30) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .