2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

கட்டுப்பாட்டை மீறினால்?; ஜனாதிபதியின் அறிவிப்பு

Freelancer   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்காத பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளைக் கைப்பற்றி அவசரகால விதிமுறைகளின் கீழ் கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி நெருக்கடி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது, அங்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அரிசிக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்த போதிலும், சந்தையில் அரிசியின் விலை குறையவில்லை என்று பல அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் உணவுத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இதற்கான உடனடித் திட்டத்தை வகுக்குமாறு வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .