Editorial / 2022 ஜனவரி 10 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களில், தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய உறுப்பினர்களை கறிவேப்பிலையாக தூக்கியெறிந்து விட்டனர் எனக் குற்றச்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடே குழப்பத்துக்குள் சிக்கித் தவிக்கிறது என்றுத் தெரிவித்த அவர், அம்மையார் காலத்தில் கூட இவ்வாறு உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்று வரிசையில் நின்றிருந்த மக்கள், தூசனங்களை பேசவில்லை. நாட்டை ஆட்சி செய்யவேண்டுமாயின் நல்ல குழுவொன்று இருக்கவேண்டுமெனத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, தனியாக நின்றுக்கொண்ட நாட்டை ஆட்சிசெய்யமுடியாது என்றார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தை, சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நீடித்துக்கொள்வதற்கு தயாராக வேண்டாமென தான் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.
1 minute ago
21 minute ago
51 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
21 minute ago
51 minute ago
58 minute ago