2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘சீனாவின் அடிமை நாடாக இலங்கை மாற நேரிடும்‘

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளிடம் இருந்து  பெறப்படும்  கடன்களால் சீனா போன்ற ஒரு நாட்டின் அடிமை நாடாக இலங்கை மாற வேண்டிய நிலை ஏற்படும்  என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கை மீதான விவாதத்தில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது”  இதுவரைகாலமும் எமது கடன்களை காலத்திற்குக் காலம் இடைவிடாமல் செலுத்தி  வந்த நாம் அந்த நற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக வாயிற்படியில் காலூன்றி நிற்கின்றோம். ஏதாவது ஒரு சர்வதேசக் கடனை உரியவாறு உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாமல் விட்டால் அது மற்றைய சகல கடன்களையும் பாதிக்கும். அவ்வாறு நடந்தால், அது மிகப் பெரிய ஆபத்தாக உருவெடுக்கும். எமது கடன்காரர்கள் யாவரும் உடனே தமது கடன்களை முழுமையாக நாங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கேட்பார்கள்.

அதே நேரத்தில் அவற்றை செலுத்த எம்மால் வேறு கடன்களைப் பெற முடியாத ஒரு ஆபத்து நிலை ஏற்படும். உண்மையில் எமக்குக் கடன்தர எவரும் முன்வரமாட்டார்கள். சீனா போன்ற ஒரு நாட்டின் அடிமை நாடாகவன்றி எம்மால் தனித்தியங்க முடியாமல் போய்விடும். நாங்கள் கடன் பொறி ஒன்றில் அகப்பட்டுள்ளோம். ஆனால் அதில் இருந்து மீள வழிதேடாமல் இப்பொழுதும் அரசியல் பேசிக் கொண்டே காலம் கடத்திவருகின்றோம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .