2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

கதிர்காமம் கந்தன் ஆலய கொடியேற்றம்

Freelancer   / 2021 ஜூலை 11 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

இலங்கையின்  வரலாற்று சிறப்புமிக்க  கதிர்காமம் கந்தன் ஆலயயத்தின்  வருடாந்த ஆடிவேல்விழா  உற்சவத்தையொட்டிய கொடியேற்ற நிகழ்வு, நேற்று (10) மாலை சுகாதாரமுறைப்படி நடைபெற்றது.

வழமைபோல கொடிக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு, கதிர்காமம் ஆலய வளாகத்திலுள்ள பால்குடிபாவா பள்ளிவாசலை  சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, நான்கு  சமயத்தலைவர்களால் ஆசியுரைகள் வழங்கி இக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

இதற்கமைய நேற்று (10)  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆடிவேல்விழா உற்சவங்கள் எதிர்வரும்  23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. நாட்டில் நிலவும் கொவிட் 19 தாக்கம் காணரமாக கொடியேற்றம் தொடக்கம் தீர்த்தோற்சவம் வரையிலான காலப்பகுதியில் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காம உற்சவ திருவிழாக்காலங்களில் ஆக ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .