2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

‘சூரியனில் குடியிருக்கலாம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபஞ்சப் பெரு யாத்​திரையை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன். என்னே! பிரமாண்டம் இந்தப் பிரபஞ்சம். அதன் அழகும் விசாலமும் சொல்ல முடியா ஆண்டவன் படைப்பு. எத்தனை பகாடி கோள்கள், நட்சத்திரங்கள், கோடானுகோடி சூரியன்கள்.

எல்லாமே அழகுதான். அங்கு யார், யார் வசிக்கிறார்கள்? புதுவித வடிவங்கள். ஓசை வராத நுண்ணிய அலை வடிவில் கருத்துப் பரிமாற்றங்கள். சில கோள்களில் இதயம் தொடும் ஓசைகள், வார்த்தையாடல்கள், வசீகர அலங்காரங்கள் என ​எல்லாவற்றையும் சொல்லக் கூடிய வல்லமை எனக்கில்லை.

பூமியில் காலடி எடுத்து வைத்தபோது, என் சித்தம் அஸ்தமித்ததுபோல் உணர்ந்தேன். பல ஆண்டுகள் அண்டப் பிரபஞ்சத்தில் சஞ்சாரம் செய்தபோதிலும், பூமியில் எந்தத் திருத்தங்களையும் அவதானிக்க முடியவில்லை. வல்லரசுகளின் வாணவேடிக்கைகள், தலைமைத்துவங்களில் துஷ்டர்களின் ஆக்கிரமிப்புகள் என மனிதர்களின் மனங்கள் அதிக சூடாக இருக்கிறது. காடுகள் எரிகின்றன; தானாகவே? ஏரி, குளங்கள் நீர்நிலைகள் காணாமல் போயின. இனமத மொழி பேதம்; அதனால் வெறியாட்டம். எல்லோருடைய உறவுகளும் மமதையுடன்தான்.

உஷ்ணப் பெருமூச்சுடன் சனங்களின் சத்தம். இங்கு வாழ்வதைவிட, சூரியனில் குடியிருக்கலாம். பூமியிடம் நெருப்பை, சூரியன் கேட்கும் காலம். எங்கே போவது நாம்?

வாழ்வியல் தரிசனம் 06/09/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X