2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

நுவரெலியா தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகம்

Freelancer   / 2023 மே 28 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே. குமார்

நுவரெலியா பீற்று சின்னக்காடு தோட்டம் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய புணராவர்தன நவகுண்டபக்ஷ கும்பாபிஷேகம்  எதிர்வரும்  2-6-2023 வெள்ளிக்கிழமை  நடைபெறும். 

இன்று (29) திங்கட்கிழமை  காலை10 மணிக்கு விநாயகர் வழிப்பாட்டுடன் குப்பாபிஷேகம் நிகழ்வுகள் ஆரம்பமாகும். நாளை(30)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை திரு விளக்கு பூஜை நடைபெற்று இரத்தினஸ்தாபனம், யந்திரஸ்தாபனம்,விம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம் நடைபெறும்.

நாளை மறுதினம் (31) புதன்கிழமை எண்ணைக் காப்பு சாத்துதலும் விசேட யாக பூஜையும் நடை பெறும். எதிர்வரும் (1) வியாழக்கிழமை யாகசாலை பிரவேதம்,  யாக பூஜை, விசேட ஹோமம், கும்ப பூஜை என்பன நடைபெறும்.

எதிர்வரும் 2 ஆம் திகதி கும்பம் ஸ்தூலலிங்கப் பிரவேசம் நடைபெற்று முற்பகல் 11--52 மணி முதல் 12--50 மணி வரையுள்ள முகூர்த்தத்தில் ஸ்தூபி அபிஷேகம் பிரதானகும்பம் கர்ப்பக்கிரகப் பிரவேசம்,  கலாஹர்னம் மூர்த்திகள்ஆவாகனம்  மஹா கும்பாபிஷேகம்  நடைபெற்று பகல் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .