2023 ஜூன் 07, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏமாற்றப்படல், துன்புறுத்தப்படல், ஏளனப்படுத்தப்படல், அவமானப்படுத்தப்படல், நம்பிக்கைத் துரோகத்துக்கு உள்ளாகுதல் என்பவற்றால், மனம்படும்பாடு சொல்லும் தரமன்று.

மனிதர்கள் எல்லோருமே சமமானவர்கள். இவர்களின் படைப்பு, மற்றவர்களைச் சீண்டித் துன்புறுத்துவதற்காக உருவாக்கப்பட்டதல்ல!

குடும்பக் கஷ்டம், வசதியின்மை காரணமாக அநேகர், தங்கள் இயல்பான நிலையில் இருந்து, தாழ்ந்துபோய் விடுவதாக உணர்கிறார்கள்.

ஒருவரின் ஏழ்மையை இழிவாகக் கருதி, சுடுசொல்லால் நிந்திப்பதுபோல் கொடுமை வேறில்லை. மனிதனை மனிதன் கௌரவப் படுத்துவது மானுட இயல்பாகக் கொள்ள வேண்டும்.

சொல்லப் போனால் ஏழைகளில் பலர், செல்வம்மிக்கோராக இல்லாது விடினும், அவர்கள் வாழ்க்கையில் குடும்பப் பிணைப்பு, உற்றார் உறவினர் பிணைப்பு போன்றவற்றில் சந்தோசமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பகிர்ந்து உண்டு, வெறும் தரையில் துயில் கொள்கின்றார்கள். இருப்பதில் திருப்தி அடைகின்றார்கள். அதுவே சிறப்பு. அன்பை இயல்பான குணமாக்க வேண்டும். வாழ்க்கைப் பயணம் மாறுபடும். யுகத்தின் சரித்திரம் மாறும். எவரும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர்.

-பருத்தியூர் பால. வயிரவநாதன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .