2022 ஜூலை 07, வியாழக்கிழமை

வாழ்வியல் தரிசனம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்த வயோதிபர், பசி மிகுதியால், சுற்றுமதிலால் சூழப்பட்ட பெரிய வீட்டுக்கு முன் நின்று, “அம்மா, அம்மா” எனக் குரல்கொடுத்தார். வீட்டுக்காரி கோபத்துடன் வௌயே வந்து, ஏன் இப்படிக் கத்துகின்றாய் எனக் கேட்டாள். “அம்மா, நான் தூரத்திலிருந்து வருகின்றேன்; பசிக்கிறது; ஏதாவது கொடுங்கள்” என்று அந்த வயோதிபர் இரந்தார்.

அதைக் கேட்ட ​அவள், பொங்கி எழுந்து, “போ..போ..இங்கே ஒன்றும் இல்லை” எனக் கூறி, வாசற்கதவைப் ‘படார்’ எனச் சாத்திவிட்டு, உள்ளே சென்றாள்.

வயோதிபரும் தள்ளாடியபடியே, நடந்து சென்று, அருகிலுள்ள கோவில் கிணற்றில், நீரை அருந்திவிட்டு, அந்த வீதியில் தொடர்ந்த நடந்தார். அப்போது, வீதியோரத்தில் கைப்பை ஒன்றைக் கண்டெடுத்தார். அதை விரித்துப் பார்த்தபோது, அதற்குள் பணக்கட்டுகள்.

அதற்குள் இருந்த ஒரு துண்டில் முகவரியொன்று காணப்பட்டது. வந்த வழியே திரும்பி, அந்த முகவரியைத் தேடி நடந்தார். அவர் முன்னர் வந்து கதவைத்தட்டிய வீட்டின் முகவரியாகவே, அந்த முகவரியும் காணப்பட்டது.

மீண்டும் அந்த வீட்டின் கதவைத் தட்டினார்; மீண்டும் அதே பெண், கோபத்துடன் கதவைத் திறந்தாள். “அம்மா மன்னிக்கவும்; வீதியில் கிடந்து எடுத்தேன்; இதோ உங்கள் பணப்பை” என்றவர், அதைக் கொடுத்தார்.

“ஐயா..ஐயா” என அவள் அழைக்க, அவரோ திரும்பிப் பார்க்காது நடந்தார்.

6. -பருத்தியூர் பால. வயிரவநாதன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .