2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

‘நேசித்து வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்’

Editorial   / 2018 ஜூலை 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் தூய்மையுடன் வாழும் ஒருவர், பிறர்போல வாழ விரும்ப மாட்டார். பிறரைப் போல வாழ எண்ணுவதுகூட, ஒரு நடிப்புத்தான். பெரியோர்களின் உன்னத வாழ்க்கையைத் தெரிந்து, தெளிவது நல்லது. அதற்காக அவரைப் போலவே தங்களை உருமாற்ற விளைவது ஆகாது. ஒவ்வொருவரும் தமக்கான பாணியில், நற்பண்புகளுடன் வாழ்வது தனித்துவமானதாகும். 

‘நான் இறை படைப்பால் உருவானவன்; எனக்கான அறிவு, திறன் எல்லாமே தெய்வகடாட்சம் நிறைந்தவை; நான் நடித்து வாழ விரும்பாதவன்; அதனால், நான் கர்வம் கொண்டவனும் இல்லை; எனது இயல்பு எனக்கானது; நல்வழியை நாட்டமாகவும் உயிர் மூச்சுமாகக் கொண்டவன் நான்’. 

மேற்படி கருத்து ஒருவரின் தன்னம்பிக்கை, திடசிந்தனைக்குரியது.எவருமே பெரியோர் ஆகலாம்; தலைவராகவும் வரமுடியும். ஆயினும் நான், நானாகவே வாழ விரும்புகின்றேன். அதுவே, பலம் என்பதை உணரவேண்டும். 

‘என்னை நான் வரவேற்கின்றேன்; என்னை நான் விரும்புகின்றேன்; அதுபோலவே பிறரையும் நான் என்றும் கௌரவிப்பேன்’. இந்த எண்ணம், பரந்துபட்ட உண்மை நிலை என்பதை அறிவீர்களாக. மனிதன் மனிதனுக்குப் பயப்படவும் கூடாது. எவரையும் நேசித்து வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.  

வாழ்வியல் தரிசனம் 19/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .