Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 மே 30, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 22 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் தரம் 12இல் விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் எம்.ரி.முகம்மட் ஜினான் என்ற மாணவன் கண் பார்வையற்றோர் பயன்படுத்தும் வெள்ளைப்பிரம்புக்கு பதிலாக நவீன ஸ்மாட் டிஜிட்டல் தெழில்நுட்பத்துடனான(smart digital test white cane) என்ற புதிய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
விழிப்புலனற்றவர்கள் அல்லது பாரிய பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் ஒரு சாதனமாக வெள்ளைப் பிரம்பு (white cane) விளங்குகின்றது. விழிப்புலனற்றவர்களின் ஒளிவிளக்காகவும், ஊன்றுகோலாகவும், அடையாளச் சின்னமாகவும் வெள்ளைப் பிரம்பு உள்ளது. பிறிஸ்ரலைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் என்பவரால் 1921ஆம் ஆண்டு வெள்ளைப் பிரம்பு கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
குறித்த மாணவன் தனது கண்டுபிடிப்பு பற்றி கருத்து தெரிவிக்கையில், “முதல் முதலில் நான் கண்டுபிடித்துள்ள ஸ்மாட் டிஜிட்டல் தொழில் நுட்ப முறையிலான வெள்ளைப்பிரம்பு நவீன வசதிகள் பலவற்றை கொண்டுள்ளன. நான் தயாரித்துள்ள வெள்ளைப்பிரம்பு பல நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டமைந்துள்ளது. இது போன்ற ஒன்றை இலங்கையில் மாத்திரமல்ல உலகிலும் இதுவரை எவரும் கண்டுபிடிக்கவில்லை. இறுதியாக உலகளாவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்படும் வெள்ளைப்பிரம்பானது வீதியை கடக்க ஒளியை வெளியிடும் சென்சர் மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ள வெள்ளைப்பிரம்பாகும். ஆனால் நான் தயாரித்துள்ள வெள்ளைப்பிரம்பில்,
1. Alert deductions - முன்னாலுள்ள பொருளைத்தட்டி உணரத் தேவையில்லை ஒலி எழுப்பும் அமைப்பு உள்ளது. இரவுநேரத்திலும் வீதியைக்கடக்க உதவும் LED சென்ஸர் லைட் உள்ளது இது வாகன ஓட்டுனர்களுக்கும் விளங்கும். கண்தெரியாதவருக்கு காது கேட்காமல் இருந்தால் ஒலியதிர்வு கைப்பிடியில் உள்ளது
2. Smoke deductions - நச்சு வாயுத்தாக்கத்தை உணரும் ஒலி எழுப்பும் சென்ஸர் உள்ளது.
3. Bluetooth deductions - வீட்டிற்குள்ளிருந்து இன்னொருவர் இயக்கும் வண்ணம் Bluetooth வசதியும் உண்டு.
மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது குடும்பத்தினரும், நண்பர்களும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஊக்கம் தந்து தட்டி கொடுத்தார்கள்.
பணத்தை சேகரிக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் குத்திகளை சீலைலே கட்டி முடிச்சிட்டு கிணற்றிலே கூட சேமித்திருக்கிறேன்.
விடாமுயற்சி, நம்பிக்கை இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இன்னும் இதனை நவீனமயப்படுத்த முடியும். ஒன்லைன் ஊடாகவே அனைத்து சென்சர்களையும் கொள்வனவு செய்து கணணிமயப்படுத்தி ஒரு சிறிய சிப்பில் (Memory) வைத்து இயக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
1 hours ago
2 hours ago