2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

அழியாப் புகழைக் கொண்ட சிகிரியா

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களில், இலங்கையில் அமையப் பெற்றுள்ள 'சிகிரியா' மலைக்குன்று தனி இடத்தை வகிக்கின்றது. சுமார் 1500 வருடங்கள் பழைமை வாய்ந்த இம்மலைக்குன்றானது, கிட்டத்தட்ட 200 மீற்றர் உயரமானதாகும். இதன் பின்னணியில் இலங்கையின் அரச வரலாறு சம்பந்தப்பட்ட கதை ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்;.

இலங்கையில் வாழ்ந்த காசியப்ப என்ற மன்னனால், இம்மலைக்குன்று வடிவமைக்கப்பட்டு ஆட்சி செலுத்தப்பட்டு வந்த இடமாகும். இதன் வடிவமைப்பானது தூரத்தில் இருந்து நோக்கும் பொழுது சிங்கம் ஒன்று படுத்திருப்பது போல காட்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளமையானது, பார்ப்பவர்களை பிரம்மிப்பூட்டுகிறது. இதனை 'சிங்க குகை' என்றும் அழைக்கும் வழக்கம் மக்களிடையே காணப்படுகின்றது.

மலைக்குன்றின் வெளிப்பகுதியில் மட்டுமல்லாது, உட்கட்டமைப்புக்களும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். உட்பகுதியில் காணப்படுகின்ற செதுக்கல் மற்றும் சித்திர வேலைப்பாடுகள் பார்வையாளர்களை வசீகரிக்கும் விதத்தில் உள்ளன. பிரதானமாக சுவரோவியங்கள் தனி இடத்தை பிடிக்கின்றன. இவ்வோவியங்கள் 'அஜந்தா' வகையை சார்ந்தனவாகவும், இன்று வரை மங்காத நிலையில் காணப்படுகின்றமையும் அக்கால கலையின் திறனை பறைசாட்டுகின்றன.

இத்தகைய கலையம்சமும் சிறப்பம்சமும் பொருந்திய சிகிரியா மலைக்குன்றினை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. முக்கியமாக சென்று பார்வையிடும் இடங்களில் சிகிரியாவும் பிரதான இடத்தைப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .