2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்

Freelancer   / 2023 மே 25 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ  விஞ்ஞாபனம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஏ 9 வீதியின் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ  விஞ்ஞாபனம் இன்று(25-05-2023)  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.

இன்று காலை 8:30 மணிக்கு கும்ப பூசையுடன் ஆரம்பமாகி மூலஸ்தான பூஜை யாக பூசை தம்ப பூசை இடம்பெற்று கொடியேற்றம் நடைபெற்றது .

வசந்த மண்டப பூசையை  தொடர்ந்து விநாயகர் உள்வீதி வலம்  வருதல் நடைபெற்றது
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில்  எதிர் வரும் 02ம் திகதி  தேர் திருவிழாவும் மூன்றாம்திகதி  தீர்த்த திருவிழாவும்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X