Editorial / 2018 செப்டெம்பர் 07 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூமி நடுங்குமாம்; வானம் வெடித்துச் சிதறுமாம்; மலை உதிருமாம்; கடல், நிலத்தை மூடுமாம்; நிலமே அழிந்து தெரியாமல் போகுமாம். நல்லது போகட்டும்.
இந்தப் பூமியில் துஷ்டர்களின் கெடுபிடி நிறைந்த ஆக்கிரமிப்பில் இருந்து, விடுபடமுடியாது விடினும், தலைநிமிர்ந்து வாழ, நாம் பழகிவிட்டோம். நல்ல நிலை, நிலையாய் வரும் என்று காத்திருக்கும் நிஜ மனிதர் நாம்.
பேதத்துடன் பேசும் எச்சரிக்கைப் பேச்சுகளுக்கும், வாழ்விடத்தை அபகரிக்கும் நயவஞ்சகத்தனங்களுக்கும் அஞ்சாத நாங்கள், இந்தப் பூமிப் பிரளயத்துக்காகவா அஞ்சப்போகின்றோம்.
விதி வழி செல்வது எமது வழியல்ல; எங்களால் உருவாக்கப்பட்ட வழியே விதி. பொய்யர்களின் தளராத அழுத்தங்கள்தான் எமக்கு வழி சொல்கின்றன.
எனினும், பூமி புரளாது; வானம் உடைபடாது; மலைகளும் உதிரப்போவதில்லை. விஞ்ஞானம் மிரட்டுகிறது; மெஞ்ஞானம் ஆறுதலூட்டுகின்றது. மக்கள் அனைவரும் பண்புடன் வாழ்ந்தால், நலமாய் வையகம் உயர்ந்து நிற்கும். கவலையை ஒழி; காரியம் நடக்கும்.
வாழ்வியல் தரிசனம் 07/09/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
6 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago