2022 ஜூலை 07, வியாழக்கிழமை

128 முறை திரைப்படம் பார்த்து இளைஞர் சாதனை

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தை வெளியிட்டனர். பலர் இந்த திரைப்படத்திற்காக காத்திருந்து வெளியான திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை அமெரிக்காவின் பிளோரிடாவை சேர்ந்த அகஸ்டீன் என்ற 30 வயது இளைஞர் 128 முறை தியேட்டரில் சென்று பார்த்துள்ளார். 

இது குறித்து அகஸ்டீன் என்பவர் கூறும் போது: "நான் முதல் நான் முதல் காட்சியை பார்த்தேன். அன்று முதல் தினமும் தியேட்டரில் இந்த திரைப்படத்தை பார்த்து வருகிறேன். எனக்கு எந்த உலக சாதனையும் புரிய வேண்டும் என்ற விருப்பமில்ல. அந்த படம் பிடித்திருந்ததால் முதல் இரண்டு வாரம் இந்த திரைப்படத்தை தினமும் சென்று பார்த்தேன். 

ஆனால் இந்த திரைப்படம் பல சாதனைகளை படைத்த பின்பு அதனால் தினமும் பார்க்க துவங்கினேன். கடந்த 2014ஆம் ஆண்டு கேப்டன் அமெரிக்கா திரைப்படம் வெளியான போதும் கூட தினமும் அந்த திரைப்படத்தை வீட்டிலே பார்த்தேன். ஆனால் இந்த திரைப்படத்தின் மீதான ஈர்ப்பு என்னை தினமும் அதை தியேட்டரில் பார்க்க வைத்தது. இதே போல மற்ற படத்தை பார்ப்பேனா என தெரியாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 4-5 தடவை அதை பார்ப்பேன். இதற்கு என் குடும்பத்தினர் ஆதரவளித்தனர். நான் 100ஆவது முறை திரைப்படம் பார்த்த போது எனது மொத்த குடும்பத்தையும் அழைத்து சென்றேன்." எனக் கூறினார். 

இதற்கு முன்னர் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த அண்டனி மிட்சல் என்பவர் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தை 103 முறை தியேட்டரில் பார்த்தது தான் கின்னஸ் சாதனையாகியுள்ளது. இந்நிலையில் தற்போது அகஸ்டீன் 128 முறை பார்த்த நிலையில் அவர் 200 முறை பார்க்க வாய்ப்புள்ளது. அவர் பார்த்து முடித்ததும் கின்னஸ் புத்தகத்தில் இந்த சாதனை இடம்பெறும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .