2022 ஜனவரி 22, சனிக்கிழமை

கண்டி இந்திரா மானெல் ஹோட்டல்

Menaka Mookandi   / 2013 மார்ச் 16 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


கண்டி, தெல்தெனிய மகாவலி கங்கைக்கு அருகில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் அழகான மலைப்பகுதியில் அமைந்துள்ளது இந்திரா மானெல் ஹோட்டல். போர்த்துக்கேயர்களால் கொக்கோவா தோட்டம் என்று இப்பகுதி அழைக்கப்பட்டிருந்தது.

கறுவா, மிளகு போன்ற சிறு ஏற்றுமதிப் பயிர்கள் நிறைந்த இப்பகுதி, காட்டு விலங்குகளான முள்ளம்பன்றி, முயல்கள், மான்கள் உள்ளிட்ட பலவகை பறவைகள் நடமாடும் ரம்மியமான இடமாகவும் திகழ்கிறது. நீச்சல் தடாகம் போன்று இயற்கையாக அமையப்பெற்றுள்ள ஆறு இவ்விடத்துக்கு மிகவும் புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும் வாரி வழங்குகின்றது.

டபள், ட்ரிபல், குடும்ப சகிதம் தங்கக்கூடிய வகையில் 23 படுக்கையறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் ஏசி கொண்ட படுக்கையறையொன்றுக்கு 5500 ரூபாவும் ஏசி அற்ற படுக்கையறையொன்றுக்கு 3300 ரூபாவும் அறவிடப்படுகின்றது. சுமார் 500 பேர் அமரக்கூடிய வகையில் தலா இரு திருமண மண்டபங்கள் இங்கு அமையப்பெற்றுள்ளன.

மீமூரே கொல்ப் மைதானம், விக்டோரியா பூங்கா, மகியங்கனை, பல்லேகல விளையாட்டு மைதானம், தெகல்தொருவ விகாரை உள்ளிட்ட முக்கியத்துவம்வாய்ந்த இடங்கள் பல இந்த ஹோட்டலுக்கு அருகாமையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு :- 0777943062 மற்றும் 0812375205


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X