2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளுக்கிடையிலான மேசைப் பந்துப் போட்டி

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ்

  மஹிபால ஹேரத் வெற்றி கிண்ணத்திற்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மேசைப் பந்துப் போட்டி கடந்த 20,21,22 ஆகிய மூன்று தினங்கள் கேகாலை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

கேகாலை மாவட்ட மேசை பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி போட்டியில், நாட்டில் சகல மாகாணங்களிலிருந்தும் 10 வயது தொடக்கம் 21 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மேற்படி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சப்ரகமுவ  மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்ட மேசை பந்து சங்கத்தின் தலைவருமான கனக ஹேரத் ஆகியோர் வெற்றி கிண்ணங்கள் வழங்கி கௌரவித்தனர்

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண விளையாட்டத்துறை அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .