2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கரப்பந்தாட்டத் தொடர்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- துவாரக்ஷான்

மலையக இளைஞர்கள் மத்தியில் கரப்பந்தாட்ட விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் சென். கூம்ஸ் தோட்ட ஏஷியன் விளையாட்டு கழகம் நடத்தும் மாபெரும் பகல்-இரவு கரப்பந்தாட்டத் தொடரானது, எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தலவாக்கலை சென். கூம்ஸ் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் பங்குபற்றும் விளையாட்டுக் கழகங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் தங்களின் கழகத்தை பதிவு செய்யும்போது அனுமதிக் கட்டணமாக 2,000 ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது.

இத்தொடரில் சம்பியனாகும் அணிக்கு 30,000 ரூபாயும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு 20,000 ரூபாயும், மூன்றாமிடத்தை பெறும் அணிக்கு 10,000 ரூபாயும் பணப்பரிசாகவும், பதக்கங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பித்டதக்கது.

குறித்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் நுவரெலியா மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் நடுவர்கள் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

இத்தொடர் தொடர்பான விபரங்களை தெரிந்துகொள்ள, ஆர்.கே. ஜீவா (அலைபேசி இல – 0779707031), எஸ். வினோத் (அலைபேசி இல – 0779514777), எம். திசையராஜா ஆகியோருடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுகொள்ளமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .