2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

சம்பியனான மாவடி லெஜன்ட்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை சிறப்பிக்குமுகமாக அக்கழகத்திலுள்ள அனைத்து வீரர்களையும் மூன்று அணியாகப் பிரித்து நடைபெற்ற தொடரில் மாவடி லெஜன்ட் சம்பியனானது.

அணிக்கு எட்டுப் பேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட குறித்த மென்பந்தாட்டத் கிரிக்கெட் தொடரில், மாஸ்டர் அணியை வென்றே லெஜன்ட் சம்பியனாகியிருந்தது.

மாவடிப்பள்ளி கல்முனை அல் அஷ்ரப் மகா வித்தியாலய மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இத்தொடரில் குறித்த இரண்டு அணிகளைத் தவிர்த்து மாவடி ஹில்ஸ் அணியும் பங்கேற்றிருந்தது.

இத்தொடருக்கு பூரண அனுசரணை வழங்கிய காரைதீவுப் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம். ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சம்பியனான மாவடி லெஜன்ட் அணியினருக்கு கிண்ணத்தினை வழங்கியதுடன், இரண்டாமிடத்தைப்பெற்ற மாவடி மாஸ்டர் அணியினருக்கும் மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகநிர்வாகிகளினால் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .