2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

இறுதிப் போட்டியில் விம்பிள்டன்

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளத்தில், புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தி வருகின்ற கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்த விம்பிள்டன் கழகம் தகுதிபெற்றுள்ளது.

புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் புத்தளம் லிவர்பூல் கழகத்தை வென்றே இறுதிப் போட்டிக்கு விம்பிள்டன் கழகம் தகுதிபெற்றிருந்தது.

இப்போட்டியின் முதற்பாதியின் ஐந்தாவது நிமிடத்தில் விம்பிள்டன் வீரர் சரண்ராஜ் தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றார். தொடர்ந்து ஏழாவது நிமிடத்தில் விம்பிள்டனுக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டியை அவ்வணி வீரர் சதாம் கோலாக மாற்றினார். முதற்பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் விம்பிள்டன் முன்னிலை வகித்தது. 

இரண்டாவது பாதியின் நான்காவது நிமிடத்தில் லிவர்பூலின் ரஸ்வான் அதிரடியான கோலைப் பெற்றதைத் தொடர்ந்து போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது.

போட்டி நிறைவு பெறும் வரைக்கும் இரண்டு அணிகளுமே கோல்களைப் பெற கடுமையாகப் போராடின. எனினும் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளுமே மேலதிக கோல்களைப் பெறாததால் விம்பிள்டன் கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இப்போட்டிக்கு மத்தியஸ்தர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், ஏ.ஏ.எம். கியாஸ், ஏ.ஓ. அஸாம், எம்.எஸ்.எம். அஸ்பான் ஆகியோர் கடமையாற்றினர்.

அந்தவகையில், எருக்கலம்பிட்டி நாகவில்லு கழகத்தை இறுதிப் போட்டியில் விம்பிள்டன் கழகம் சந்திக்கவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X