Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ்

மருதமுனையில் சேர்ந்த கல்வியற் கல்லூரி பயிலுநர் ஆசிரியரும், விளையாட்டு வீரருமான எம்.எம்.எம். ஹஸான் குண்டு போடுதலில் தேசிய மட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் 33ஆவது விளையாட்டு விழா தற்போது மாவட்ட ரீதியாக நடைபெற்று வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில், குண்டு போடுதலில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தேரிவு செய்யப்பட்டுள்ளார். இரண்டாமிடத்தை அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மூன்றாம் இடத்தை அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் பெற்றுக் கொண்டனர்.
மருதமுனையை சேர்ந்த விளையாட்டு வீரர் எம்.எம். எம்.ஹஸானுக்கு பிரதேச மக்கள் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இவர் மருதமுனை அல் -மினன் வீதியில் வசித்து வரும் ஷேகு இஸ்மாயில் மசூர் - அப்துல் கரீம் நபிஷா உம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வரும், மருதமுனை அல் - ஹம்ரா வித்யாலயாம், ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியவற்றின் பழைய மாணவரும் ஆவார்.
முதலாமிடத்தைப் பெற்றவர்கள் மாத்திரம் கொழும்பு சுகததாச அரங்கில் இடம் பெறவிருக்கும் தேசிய போட்டியில் பங்குபற்றவுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
19 minute ago
30 minute ago
34 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
34 minute ago
46 minute ago