2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மல்யுத்தப் போட்டியில் மட்டக்களப்பு அணி முதலிடம்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 14 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

இலங்கை சிறைச்சாலைகளுக்கிடையில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில், தேசிய ரீதியில் மட்டக்களப்பு அணி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அகில இலங்கை சிறைச்சாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற மல்யுத்தப் போட்டியானது பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்றது. இப்போட்டியில் மட்டக்களப்பு சிறைச்சாலையை சேர்ந்த அணி கலந்து கொண்டு 9 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், நான்கு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று அகில இலங்கை சிறைச்சாலைகளுக்குள் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இப்போட்டியில் காரைதீவு மண்ணைச் சேர்ந்த இரண்டு இளம் வீரர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

காரைதீவைச் சேர்ந்த அ. பிறேமகாந்தன் 97 கிலோ கிராம் தொடக்கம் 125 கிலோ கிராம் எடை கொண்ட போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும் மற்றும் அஜித் 64 கிலோ கிராம் தொடக்கம் 71 கிலோ கிராம் எடை கொண்ட போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும் பெற்றுக் கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .