2023 ஜூன் 01, வியாழக்கிழமை

வென்ற இரத்மலான பார்வைற்றோர் கிரிக்கெட் அணி

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்ராஹிம்

விழிப்புலனற்றோர் சங்கத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கிழக்கு மாகாண பிறில்லியன்ட் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியுடனான போட்டியில் கொழும்பு இரத்மலான பார்வைற்றோர் கிரிக்கெட் அணி வென்றது.

 மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இரத்மலான விழிப்புணர்வற்றோர் கிரிக்கெட் அணி,   கிழக்கு மாகாண விழிப்புணர்வற்றோர் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 15 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 95 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இரத்மலான அணி 14.2 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக இரத்மலான அணித் தலைவர் திமுத்த பெரேரா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .