2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டிக்கு யாழிலிருந்து அறுவர்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 14 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு வீர, வீராங்கனைகள், கிரேக்கத்தில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியானது கிரேக்கத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் வெற்றிகளைப் பெற்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர் உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

குறிப்பாக கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் வேணுகானன் நயனகேஷன் ஏழு வயது ஆண்கள் பிரிவிலும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சிவஞானவேல் நர்த்தவி 15 வயது பெண்கள் பிரிவிலும், தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று கிரேக்கத்தில் நடக்கவுள்ள சதுரங்கப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் இப் போட்டிகளில் யாழ். மாவட்டத்திலிருந்து 13 வயது பெண்கள் பிரிவில் உ. வைஷாலி மூன்றாமிடத்தைப் பெற்றும், அ. ஆருத்ரன் 17 வயது ஆண்கள் பிரிவில் நான்காமிடத்தைப் பெற்றும், பி. ஜனுக்சன் 13 வயது ஆண்கள் பிரிவில் ஆறாமிடத்தைப் பெற்றும், பி. பிரதிக்சா 9 வயது பெண்கள் பிரிவில் ஆறாமிடத்தைப் பெற்றும் இலங்கை அணி சார்பாக உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .