2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

தாக்குதலுக்குள்ளான தொழிலாளி வைத்தியசாலையில்

சுஜிதா   / 2018 மார்ச் 19 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தலவாக்கலை - ஹொலரூட் தோட்டத் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடமையிலிருந்த மேற்பார்வையாளர் ஒருவரால் (Tea maker), இத்தொழிலாளி, நேற்று அதிகாலை 3 மணியளவில், கடுமையாகத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு இவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த தொழிலாளி, லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், மேற்படி மேற்பார்வையாளரை, தலவாக்கலை பொலிஸாரால் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .