Niroshini / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களே சுகாதார விதிமுறைக்கு அமைவாக வீதிகளில் நடமாட முடியும் என, முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதார பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியவர்கள் தடுப்பூசி செலுத்திய அட்டையினை கைவசம் வைத்திருக்க வேண்டும் எனவும் விரைவில் பரிசோதனை நடவடிக்கைக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எனவே மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படுவதுடன், தடுப்பூசி பெற்றவர்களே வீதிகளில் செல்லு அனுமதிக்கப்படும் நிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வருவதாற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026