2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் மேலும் 3 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 14 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் முடக்கப்பட்டிருந்த மேலும் மூன்று கிராம சேவகர் பிரிவுகள், இன்று (14) காலை 6 மணியுடன் விடுவிக்கப்பட்டன.

புதிய காத்தான்குடி வடக்கு 167ஏ, புதிய காத்தான்குடி தெற்கு 167சி மற்றும் புதிய காத்தான்குடி கிழக்கு 167பி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட கிராம சேவகர் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டதுடன், இயல்பு நிலையும் காணப்பட்டது. போடப்பட்டிருந்த தடைகளும் அகற்றப்பட்டன.

காத்தான்குடியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடந்த மாதம் 23ஆம் திகதி எட்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

இதில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள், கடந்த 8ஆம் திகதி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .