Freelancer / 2023 ஜனவரி 26 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி நீர்விளையாட்டுச் சங்கத்தால் மாணவர்களுக்கான நீச்சல் பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரையில் 40 மாணவர்கள் கொண்ட ஆறு அணிகள் பயிற்சியை நிறைவு செய்துள்ளன. இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள், மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய மட்டப் போட்டிகளில் பங்கு கொண்டுள்ளனர்.
செவ்வாய்க்கிமை (24) ஏழாவது அணிக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பரந்தன் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் ஏழாவது அணி மாணவர்களாக பயிற்சிகளில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சிக்குரிய அனுசரணையை பரந்தன் இந்து ம.வி பழைய மாணவர் சங்க சர்வதேச ஒன்றியத்தினர் வழங்கியுள்ளனர்.
2023 பெப்ரவரி முதல் வாரத்தில், 100 பேர் கொண்ட நீச்சல் பயிற்சி முகாம் (ஐந்து நாள்) இலவசமாக நடைபெற உள்ளது. இணைந்து கொள்ள விரும்புவோர் கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

13 minute ago
18 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
26 minute ago
32 minute ago