2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

மனசாட்சியுடன் வாக்களியுங்கள்; பிரகாஷ் ராஜ்

Ilango Bharathy   / 2023 மே 11 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுவீட் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்.

 

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பாடசாலையில்  உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

முன்னதாக நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டர் பதிவில்,காலை வணக்கம் கர்நாடகா...நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக,40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்.நீங்களும்  மனசாட்சியுடன் வாக்களியுங்கள்” எனப்  பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .