Editorial / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை மிலேச்சத்தனமான செயலாகும் எனத் தெரிவித்துள்ள கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் இதன் பின்னணி குறித்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“பாகிஸ்தானில் தொழில் நிறுவனமொன்றில் நீண்ட காலமாக முகாமையாளராக கடமையாற்றி வந்த எமது நாட்டுப் பிரஜை ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு, எரித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
“முஸ்லிம் நாடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதானது இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய எமக்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிலேச்சத்தனமான சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிகின்றோம்.
“தமது நாட்டில் பணியாற்றுகின்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டியது குறித்த நாட்டு அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்த வகையில் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ள சம்பவத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் எமது நாட்டு ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமென உறுதியளித்திருக்கின்றார். இது எமது நாட்டு மக்களுக்கு ஆறுதலான விடயமாகும்.
“பாகிஸ்தானின் இறைமைக்கும் புகழுக்கும் மாசு கற்பிக்கும் நடவடிக்கையாக இந்தச் சம்பவம் அமைந்திருக்கிறது. ஆகையால், இதன் பின்புலம் குறித்து ஆராயப்பட்டு, உண்மை நிலைவரம் வெளிப்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
4 hours ago
9 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
24 Oct 2025