2022 ஜனவரி 22, சனிக்கிழமை

யூக்கலிப்டஸ் மரங்கள் வெட்டப்படுவதால் தொழிலாளர்களின் வேலை நாள்கள் குறைப்பு

R.Maheshwary   / 2021 நவம்பர் 28 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்ஸ

அரச பெருந்தோட்ட சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்டத்தில் உள்ள  பெறுமதிமிக்க மரங்களான  யூக்கலிப்டஸ் மரங்களை வெட்டுவதற்கு தோட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளதாக தெரிவித்து, குறித்த தோட்டத் தொழிலாளர்களால் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மரங்களை வெட்டுவதால் தேயிலைச் செடிகள் நாசமாவதாகவும் இதனால் தோட்ட நிர்வாகத்தால் தமது அன்றாட வேலை நாள்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இவ்வாறு பெறுமதிமிக்க யூக்கலிப்டஸ் மரங்களை வெட்ட தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதன் மூலம் பெருந்தொகை பணம் நிரவாகத்துக்கு கிடைக்கும் நிலையில், இதனால் தொழிலாளர்களுக்கு எவ்வித பலனும் இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த தோட்டத்துக்குரிய இடமொன்று, இரத்தினக்கல் அதிகார சபைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன்மூலமும் குறித்த தோட்ட நிர்வாகம் பெறுமளவு வருமானத்தைப் பெற்றாலும் அதிலிருந்தும் தொழிலாளர்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

  இதேவேளை மவுண்ட்ஜின் தோட்ட தொழிலாளர்களுக்கு மாத த்தில் குறிப்பிட்ட சில நாள்களே தொழில் வழங்கப்படுவதுடன், மாதச் சம்பளம் கூட உரிய தினத்தில் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சுமத்துகின்றனர்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்திடம் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் முயற்சி பலனளிக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X