2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

கட்டாக்காலி உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி ஆடு, மாடுகளின் தொல்லைகள் அதிகரித்திருப்பதால், அவற்றைக் கைப்பற்றி, உரிமையாளர்களிடம் அபராதம் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இவ்வாறு கைப்பற்றப்படும் ஒவ்வொரு ஆடு அல்லது மாட்டுக்கும் நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வீதம் அபராதம் அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர பிரதேசங்களில், குறிப்பாக பிரதான வீதிகள், சந்தைகள், பஸார்கள் மற்றும் பொது இடங்களில் கட்டாக்காலிகளின் தொல்லைகள் மீண்டும் அதிகரித்திருப்பதாகவும் இதனால் வாகன விபத்துகள் இடம்பெறுவதுடன் பயணிகளும் வர்த்தகர்களும் நுகர்வோரும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மாநகர சபைக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.

இது சம்மந்தம்மாக பல தடவைகள் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டும், கட்டாக்காலிகளின் உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதாகத் தெரியவில்லை.

இதனையடுத்து, மேற்படி அபராத நடவடிக்கையை முன்னெடுக்குமாறு, மாநகர சபையின் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X