2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

பட்டிருப்பு பாலத்திற்கு அருகே மோட்டார் குண்டு மீட்பு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வ.சக்தி

 மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகாமையில்   இருந்து மோட்டார் குண்டொன்று நேற்றைய தினம் (26)   மீட்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

குறித்த பாலம் அமைந்துள்ள பகுதில் மீன் பிடித்துக் கொண்டிந்த மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் இக்குண்டு   மீட்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார், விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த மோட்டார்   குண்டினைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .