Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் பல புதிய தொழில் வாய்ப்பு உருவாக்கப்படவுள்ளதாக நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி தெரிவித்தார்.
காசல்ரி பகுதியில் நோர்வூட் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 9 இலட்சம் ரூபாய், செலவில் நிர்மானிக்கப்படவுள்ள புதிய வாசிகசாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (18) மாலை நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி தலைமையில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இங்கு உள்ள மக்களுக்கு நோர்வூட் பிரதேசசபையில் சேவைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, இந்த வாசிகசாலையில் நோர்வூட் பிரதேசசபையின் உப அலுவலகம் ஒன்றும் உருவாக்கப்பட்டு இங்குள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் சேவைகள் பெற்றுக்கொடுக்கப்படும்.என அவர் இதன் போது தெரிவித்தார்.
அரசாங்கம் கொரானாவுக்கு மத்தியிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மலையகப்பகுதியில் முன்னெடுத்து வருகின்றது. எந்த ஒரு அபிவிருத்தி திட்டமும் கொரோனாவினை காரணம் காட்டி நிறுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நாங்கள் எதிர்கட்சியில் இருந்தமையினால் அபிவிருத்திகள் சற்று தாமதமடைந்தன.ஆனால் தற்போது பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் பிரதானமாக நோர்வூட் பொகவந்தலாவை பிரதான பாதை மற்றும் வனராஜா தொடக்கம் காசல்ரி வரையான நோட்டன் பாதை கார்பட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
3 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago