Niroshini / 2021 ஜூன் 07 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் கடற்கரையில், இன்று (07) காலை, 96 கிலோகிராம் கேரள கஞ்சா, கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
நாகர்கோயில் கடற்கரையில், கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கள ரோந்துப் பணியின் போதே, கரையோரத்துக்கு அருகில் இருந்து, 3 சாக்குகளில் 96 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.
கடத்தல்காரர்களால் அவை கைவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா, கடற்படையின் மேற்பார்வையில், வடக்கு கடற்படைத் தளத்தில் வைத்து அழிக்கப்பட்டது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025