2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

‘மலையகத்தில் இடைவிலகிய மாணவர்களுக்கு வலை’

Ilango Bharathy   / 2021 ஜூலை 27 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மலையகப் பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் அறிக்கையை
பெற்று, இடைவிலகிய மாணவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது தொடர்பான
நடவடிக்கைகளை ​மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கல்வி அமைச்சும்,  மாகாண கல்வி அமைச்சும் , பொலிஸாரும் இணைந்தே நடவடிக்கை
எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், இடைவிலகுகின்ற மாணவர்கள் தொடர்பாக
எந்தவிதமான தகவல்களும் இல்லை. அவ்வாறான அநேகமானவர்களே வீட்டு
வேலைக்காக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள் என்றார்.

நுவரெலியாவில் நேற்று (26) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலிலேயே
மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைவிலகியவர்களின் நிலைமை தொடர்பாக ஆராய வேண்டிய ஒரு நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

அண்மைய சம்பவத்தில், தரகர்களையும் ஏனையவர்களையும் மாத்திரம் குற்றம் சுமத்துவதால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்றார். மேலும், இன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீடு வேலைகளுக்கு அமர்த்தப்படுகின்ற பொழுதிலும் அவர்களுடைய விவரங்கள் எங்கும் பதிவுக்கு உட்படுத்தப்படவில்லை.

இவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கான எந்தவிதமான நடைமுறையும் இல்லை. எனவே, எதிர்காலத்தில் வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பாக முறையான தகவல்கல் திரட்டப்பட்டு, அவர்களுடைய நலன்கள் தொழில் செய்கின்ற இடத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு அவர்களுக்கான முறையான சம்பளம் உட்பட பல விடயங்கள் தொடர்பாகவும்
ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .