2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

அத்தியாவசிய பொருள்கள் கையளிப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தாராபுரம், துருக்கி சிட்டி பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் நூறு மற்றும் சுகாதார பொருள்கள் உள்ளடங்களாக ஒரு தொகுதி பொருள்கள், இன்றைய தினம் (14) காலை கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தேவ சபைகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இடைநிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்ற வர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மாகாண ரீதியாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக, வடபிராந்திய தேவ சபையின் ஏற்பாட்டில், முதற்கட்டமாக, மன்னார் மாவட்டத்தில் மன்னார் - தாராபுரம், துருக்கி சிட்டி பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, நூறு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள்  மற்றும் சுகாதார பொருள்கள் உள்ளடங்களாக ஒரு தொகுதி பொருள்கள், இன்றைய தினம் காலை, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து, வடபிராந்திய தேவ சபையின் ஊழியர்களால்,மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம் கையளிக்கப்பட்டன.

இதன்போது, வைத்திய கலாநிதி ரி.ஒஸ்மன் டெனி மற்றும் வைத்திய கலாநிதி திருமதி சிறிமதி ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X