2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

பட்டதாரிகள் நியமனத்தை மீள வழங்க நடவடிக்கை

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 26 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு பட்டதாரிகள் நியமனத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா இன்று  (26) தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதற்கமைய வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.இவை தேர்தல் காலங்களில வழங்கப்பட்டன என தெரிவித்து தேர்தல் ஆணைக்குழுவினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நியமனங்கள் மீண்டும் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மீள வழங்க வேண்டுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இக் கோரிக்கைக்கமைய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஸாகர காரியவசத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான சுமுகமான தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இடை நிறுத்தப்பட்டுள்ள வெளி நாட்டு பட்டதாரிகளின் தகமைகள் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாகவும், மீள் பரிசீலனை செய்த பின்னர் நியமனம் வழங்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸாகர காரியவசம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளை 'பட்டதாரி பயிலுனர்களாக' சேவைக்கு இணைக்கும் திட்டத்தினை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உருவாக்கியிருந்தார். இத் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகுமெனவும் தெரிவித்தார்.

இருந்த போதிலும் துரதிஸ்டவசமாக வழங்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற அனைத்து வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகளும்  நிராகரிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .