Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
R.Maheshwary / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
தலவாக்கலை- லிந்துலை நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக, நகர சபையால் 25 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவிருத்தி பணிகள், இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இந்த வருட இறுதிக்குள் அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற நிலையில் கடந்த 4 மாதங்களாக காரணமின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் தவிசாளர் எல்.பாரதிதாசனிடம் வினவியபோது, நகரசபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியின் உறுப்பினர்களால் தனக்கு எதிராக, மத்திய மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உண்மையற்ற முறைப்பாடுகளால் மத்திய மாகாண ஆளுநரும் மாகாண ஆணையாளரும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கவில்லை என்றார்.
எனவே அவ்வாறு அனுமதி கிடைத்தவுடன், அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025