2023 ஜூன் 01, வியாழக்கிழமை

மதகுக்குள் கவிழ்ந்தது கார்

Editorial   / 2023 மார்ச் 19 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேகமாக பயணித்த காரொன்று மதகுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நோர்வூட்-ஹட்டன் பிரதான வீதியில் அயரபி பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழமை (18) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன், கிளங்கன்-டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்தே அந்தக்கார் மதகுக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்து எனத் தெரிவித்த நோர்வூட் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  எஸ்.சதீஸ்
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .