2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

விஜயகாந்த் உடல்நிலை தொய்வானமை உண்மை: பிரேமலதா

Freelancer   / 2022 ஜூலை 05 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.,) தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். 
இந்நிலையில், சமீபத்தில் விஜயகநாந்தின் கால் விரல்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரு நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) கூட்டணி கட்சி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வந்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், தே.மு.தி.க., பொருளாளர் விஜயகாந்த் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஒரு பெண் வேட்பாளராக திரவுபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துகள். நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமருக்கு வாழ்த்துகள். திரவுபதி முர்மு வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாட்டுக்கும் பழங்குடியினருக்கும் நீண்ட தொடர்பு உண்டு என்றார்.

 முருகனின் மனைவி வள்ளியும் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தான் என்றார். அத்துடன் விஜயகாந்த் உடல்நிலை தொய்வானமை உண்மையாகும் என்றும் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .