2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

கொரோனாவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மரணம்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

சம்மாந்துறை வலயத்திலுள்ள இறக்காமக் கோட்டத்தின் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எ.மஜீட் (வயது 70) கொரோனாத் தொற்றுக் காரணமாக இன்று (18) மரணமானார்.

சுகயீனம் காரணமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்குள்ள கொரோனா விசேட பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அந்நிலையில், அவர் இன்று காலமானார்.

இறக்காமத்தைச் சேர்ந்த மஜீட், இறக்காமம் பெரிய பள்ளிவாசல் தலைவராகவும் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .