2022 ஜனவரி 22, சனிக்கிழமை

கடமைகளைப் பொறுப்பேற்றார் சப்ரகமுவ மாகாண புதிய செயலாளர்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண புதிய பிரதான செயலாளராக சுனில் ஜயலத் நேற்று முன்தினம் (23) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சுனில் ஜயலத், 1984ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டம் பெற்றுள்ளதோடு, அதன் பின்பு பல வருட காலம் அவர் ஆசிரியர் துறையில் சேவையாற்றியுள்ளார்.

1987ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட சுனில் ஜயலத்
மஹவிலச்சிய, கஹட்டகஸ்தெனிய, மிஹிந்தலை, ரம்புக்கன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உதவி செயலாளராகவும் மற்றும் பிரதேச செயலாளராகவும் சேவையாற்றியுள்ளதுடன், சப்ரகமுவ மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும், கம்பஹா பிரதேச செயலாளராகவும் கம்பஹா மாவட்ட மேலதிக செயலாளராகவும் மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளராகவும் கமையாற்றியுள்ளார்.

சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளராக நியமனம் பெறுவதற்கு முன்பு
அவர் இறுதியாக கம்பஹா மாவட்ட செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளராக கடமையாற்றிய ரஞ்ஜனி ஜயகொடி தமது அரச
சேவையில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, சுனில் ஜயலத் சப்ரகமுவ மாகாண பிரதான
செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண பிரதான
செயலாளர் பிரபாத் உதாகர, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோத்தாகம, மாகாண பிரதி பிரதான செயலாளர் கமல் புஸ்பகுமார உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X