Editorial / 2022 ஜனவரி 03 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

கருவுற்று இருக்கும் பூனைகளுக்கு, அவற்றை வளர்ப்பவர்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. இது கோயம்புத்தூரில் நடந்துள்ளது.
''எங்கள் வளர்ப்பு பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளோம். அவற்றுக்கு பூனைகளுக்கான உணவுகளும் திண்பண்டங்களும் வழங்கினோம். பெண்களுக்கு மக்கள் வளைகாப்பு நடத்துகிறார்கள்.
இந்தப் பூனைகளும் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால் அவற்றுக்கு நாங்கள் வளைகாப்பு நடத்தியுள்ளோம். மருத்துவ மையத்துக்கு வந்து (விலங்குகள்) மருத்துவர்களுடன் இதை ஏற்பாடு செய்தோம்,'' என்று அவற்றில் ஒரு பூனையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது இது முதல்முறை என்றும் இது பூனைகளை மகிழ்ச்சியாக்கும் என்றும் இந்த வளைகாப்பில் கலந்துகொண்ட விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025