2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

‘நெமற்றோட்’ நோய் பற்றி கிளிநொச்சி விவசாயிகளுக்கு எச்சரிக்கை

Freelancer   / 2023 ஜனவரி 27 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள், நெமற்றோட் நோய் பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் மு. சிவமோகன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 'நெமற்றோட்' (வட்டப்புழு) என்ற நோயின் தாக்கம், எல்லா மாவட்டங்களிலும் காணப்படுவதாக தகவல் வெளிவரும் நிலையில், இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் அவதானிக்கப்படவில்லை. எனினும், எதிர்வரும் போகங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து பரவும் அபாயம் உள்ளதாக உணர முடிகிறது. 

எனவே, எமது மாவட்ட விவசாயிகள்,  வெளிமாவட்ட அறுவடை இயந்திரங்களை  இங்கு வரழைத்து அறுவடை செய்வதை முழுமையாக தவிர்த்து கொள்ளவேண்டும். அதேபோல் விதை நெல் கொள்வனவிலும் மிக அவதானமாக இருக்கவேண்டும். 

எமது நெற் பயிர்களில் சந்தேகப்படும் பயிரை மிக அவதானமாக, வேர்கள் அறாதவாறு பிடுங்கி, நீரில் கழுவிப் பார்த்தால், வட்டப்புழு போன்று வேர்முடிச்சுகள் தென்பட்டால் அப்பிரதேச விவசாய போதனாசிரியரின் ஆலோசனையை பெற்று, நோயை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .