2023 ஜூன் 01, வியாழக்கிழமை

நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய தலைவர் ரணிலே

Freelancer   / 2023 மார்ச் 21 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

ரணில் விக்கிரமசிங்க ஒருவராலேயே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்தார்.

“நாடு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து, உலக நாடுகளின் அனுதாபத்துக்கு உட்பட்டிருந்த நிலையில், மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டன. தற்போது சர்வதேச நாணய நிதியம் 7 பில்லியன் ரூபாய் நிதி வழங்க அனுமதி வழங்கியுள்ளமை ரணிலின் அனுபவமிக்க தலைமைத்துவத்துக்கு  கிடைத்த வெற்றி” என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “நாடு அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது. சில மாதங்களாக மக்கள் அல்லோலகல்லோல பட்டவேளை ஜனாதிபதியாக பொறுப்பேற்று, மூழ்கும் கப்பலுக்கு நங்கூரம் போட்டு பாதுகாப்பது போல இந்நாட்டை நங்கூரம் போல மூழ்க விடாமல் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றார்”.

“சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்க அனுமதி கிடைத்துள்ளமை நாட்டு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இனிவரும் காலங்களில் மக்கள் வழமை போல நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வழி பிறக்கும்.

“ஆரம்பத்தில் விமர்ச்சிக்கப்பட்டு ஜனாதிபதியாக பதவியேற்றாலும் இன்று அவற்றை தவிடு பொடியாக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கிக் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் ஜனாதிபதி ரணில் தொடங்கி விட்டார்”.

“இந்நாட்டை அபிவிருத்தி மிக்க நாடாக மாற்ற தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும்” என இ.தொ.கா உபத் தலைவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .