2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

நீதிமன்ற வளாகத்துக்கு புதிய கட்டத்தொகுதி

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் புதிய அலுவலக கட்டத்தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம்.அன்வர் ஸியாத் தலைமையில், நீதிமன்ற வளாகத்தில் நாளை (11) காலை நடைபெறவுள்ளது.

சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்வானின் அழைப்பின் பேரில், கல்முனை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, இந்தக் கட்டத்துக்கான அடிக்கல்லை உத்தியோகபூர்வமாக நட்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நீதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமையவுள்ள இந்தப் புதிய அலுவலக கட்டத்தொகுதியில் சட்ட உதவி ஆணைக்குழுவின் காரியாலயம், சிறுவர் நன்னடத்தை திணைக்கள காரியாலயம், சட்டத்தரணிகள் ஆலோசனை அறை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நிர்வாக அலுவலகம், சிற்றுண்டிச்சாலை என்பன அமைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X